பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா – 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளினர்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள 1000 ஆண்டு பழமை வாய்ந்த கொண்டத்து காளியம்மன் கோவிலில் பங்குனி மாத குண்டம் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற குண்டம் இறங்கும் நிகழ்வில் 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் 60 அடி நீள அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பல மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

#Tiruppur #TempleFestival #FireWalk #Devotion #TamilNadu #BreakingNews #Spiritual #Festival #SouthIndia #NewsUpdate