⚖️🚨 கேரளாவை நடுக்கிய கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

Kerala மாநிலம் அம்பூரியை சேர்ந்த இராணுவ வீரர் அகிலும், ராகி என்ற இளம்பெண்ணும் காதல் உறவில் இருந்தனர்.

ஏரணாகுளத்தில் வேலை செய்த ராகிக்கு அகில் ரகசியமாக தாலி கட்டியிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் அகிலுக்கு வேறு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், ராகி தடையாக இருப்பார் என நினைத்து, அகிலும் அவன் சகோதரன் ராகுலும் சேர்ந்து கொலை திட்டம் தீட்டினர்.

2019 ஜூன் 21 அன்று காருக்குள் வைத்து ராகி கொல்லப்பட்டார்.

கொலைக்குப் பிறகு, முன்கூட்டியே தோண்டப்பட்ட குழியில் உடலை புதைத்து, அடையாளம் தெரியாமல் உப்பு தூவி, மேல் கமுகு செடிகள் நட்டனர்.

காணாமல் போன ராகியைத் தேடிய போலீஸ் விசாரணை இறுதியில் குற்றவாளிகளை கைது செய்ய வழிவகுத்தது.

வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், கேரள நீதிமன்றம் அகிலும் ராகுலுக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

#KeralaNews #CrimeNews #LifeImprisonment #IndiaCrime #BreakingNews