சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் இரவு பணி முடித்து வளாகத்திற்குள்ளே இருக்கும் விடுதிக்கு சென்றபோது விடுதி அருகே அத்துமீறி உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் பெண் மருத்துவரின் முகத்தை துணியால் போர்த்தியுள்ளார். பதட்டம் அடைந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது அப்போது அவ்வழியாக வந்த மருத்துவமனை பணியாளரின் கணவர் இருசக்கர வாகனத்தில் வந்ததைக் கண்டதும் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார் .
அந்த இளைஞர் பெண் மருத்துவரை நள்ளிரவில் பின் தொடர்ந்து செய்த இந்த சம்பவம் குறித்து காலை முதல்மருத்துவமனை வளாகம் முழுவதும் மருத்துவ மாணவர்கள் விடுதி பகுதி வெளியில் இருந்து யாரும் வந்தனரா என்று கோணத்திலும் மாவட்ட காவல் துறை பல்வேறு தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளது.
தற்போது சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷித் ராவத் தலைமையிலான காவல்துறை தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஏராளமான காவல்துறையினர் மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெண்கள் விடுதி மற்றும் மாணவர்கள் விடுதி அருகே எந்தவிதமான கண்காணிப்பு கேமராக்களும் இல்லாததால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் காவல்துறைக்கு மிகுந்த சிரமம் உள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்துக்குள்ளையே பெண் பயிற்சி மருத்துவருக்கு ஏற்பட்ட இந்த சம்பவம் மருத்துவ மாணவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.