🌞 திருப்பூர்: தர்பூசணி பந்தல் திறப்பு – பொதுமக்களுக்கு இலவச சேவை.

திருப்பூரில் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் கோடை வெப்பத்தை சமாளிக்க தர்பூசணி பந்தல் தொடங்கப்பட்டது. 🍉

காங்கேயம் சாலையில் நடைபெற்ற விழாவில் ஆதரவற்ற முதியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பந்தலை திறந்து வைத்தனர்.

பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம்பழம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

நிறுவனர் இந்திரா, “கடந்த 6 ஆண்டுகளாக தினமும் 500 கிலோ தர்பூசணி, 1500 லிட்டர் ஜூஸ் வழங்கி வருகிறோம்; இந்த சேவை 60 நாட்கள் தொடரும்” என்றார்.

#Tiruppur #SocialService #SummerRelief #WatermelonCamp #TamilNadu #PublicService