மதுரையில் விறகு விலை திடீர் உயர்வு – சிலிண்டர் தட்டுப்பாடு காரணம்.

மதுரையில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விறகு விலை திடீரென உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுவரை ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்ட விறகு, தற்போது ஒரே அடியாக ரூ.300 வரை உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலிண்டர் கிடைக்காத நிலை காரணமாக பலரும் மீண்டும் விறகை பயன்படுத்தத் தொடங்கியதால் தேவை அதிகரித்துள்ளது.

சாதாரண நாட்களில் ஒரு டன் அளவுக்கு இருந்த விறகு விற்பனை, தற்போது தினமும் சுமார் 10 டன் வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

மேலும், இவ்வாறு தேவை அதிகரித்து வருவதால் அடுத்த இரண்டு நாட்களில் மதுரையில் விறகு தட்டுப்பாடும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

#Madurai #FirewoodPrice #LPGShortage #BreakingNews #TamilNaduNews