🛼 மகளிர் தினம்: திருப்பூரில் தாய்மார்களுடன் குழந்தைகள் ஸ்கேட்டிங் விழா
மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் வேலம்பாளையம் சாலையில் உள்ள தனியார் ஸ்கேட்டிங் அகாடமியில் சிறப்பு ஸ்கேட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஸ்கேட்டிங் பயிற்சி பெறும் குழந்தைகளின் தாய்மார்கள் முன் பயிற்சி இல்லாமல் தங்கள் குழந்தைகளுடன் முதன்முறையாக ஸ்கேட்டிங் செய்து உற்சாகமாக பங்கேற்றனர்.
தொடர்ந்து குழந்தைகள் லிம்போ ஸ்கேட்டிங் சவாலில் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்களும் குழந்தைகளும் சாதனை படைத்த பெண்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட பிங்க் நிற டி-ஷர்ட் அணிந்து மகளிர் தினத்தை கொண்டாடினர்.
#WomensDay #Tiruppur #SkatingEvent #WomenEmpowerment #TamilNaduNews #KidsEvent
