நாகர்கோவில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக நீதிமன்றங்களில் அதிவேக இணையம், கணினி, மின்னணு வசதிகள் இல்லாத நிலையிலும் வரும் 1ஆம் தேதி முதல் இ-பைலிங் முறையை கட்டாயப்படுத்துவதை கண்டித்து, நாகர்கோவில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நீதிமன்ற பணிகள் முடங்கின.

நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

அடிப்படை டிஜிட்டல் வசதிகள் இல்லாமல் இ-பைலிங் நடைமுறை அமல்படுத்தப்படுவது வழக்குத் தொடரில் பெரிய இடையூறாக இருக்கும் என தெரிவித்த அவர்கள், தேவையான கட்டமைப்பு ஏற்படும் வரை உத்தரவை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும் என வலியுறுத்தினர்.

தமிழ்நாடு–புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு தீர்மானப்படி, இ-பைலிங் நடைமுறையை ரத்து செய்யும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

#NagercoilNews
#Kanyakumari
#CourtStrike
#LawyersProtest
#EFilingIssue
#TamilNaduJudiciary
#PuducherryLawyers
#DigitalInfrastructure
#BreakingNews
#LatestUpdates