எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தல்: தவெக தனித்து போட்டி – விஜய் அறிவிப்பு.
எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில், தமிழகம் வெற்றி கழகம் (தவெக) எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்றும், எந்த கூட்டணியிலும் இணைவதில்லை என்றும் கட்சித் தலைவர் விஜய் தெளிவாக அறிவித்தார்.
அதேபோல், தங்களுடன் யாரும் கூட்டணி அமைக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தலை தவெக தனித்து எதிர்கொள்ளும் என்ற முடிவை தொண்டர்களிடம் உறுதி செய்யும் வகையிலேயே விஜயின் இன்றைய உரை அமைந்திருந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பு, வரும் தேர்தலில் தவெகின் அரசியல் பயணம் எந்த திசையில் செல்லும் என்பதில் புதிய எதிர்பார்ப்பையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.
#TVK
#Vijay
#AssemblyElections
#SoloContest
#TamilNaduPolitics
#Election2026
#PoliticalNews
#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia
