சென்னை: எல்எஸ்டி ஸ்டாம்ப் மற்றும் உயர் தர போதைப்பொருள் விற்பனை – 4 பேர் கைது, மேலும் 2 பேர் விசாரணையில்
சென்னை காவல்துறைக்கு 19.11.2025 அன்று கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அண்ணா நகரைச் சேர்ந்த தியானேஸ்வரன் என்பவரை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்து LSD ஸ்டாம்ப் போதைப்பொருள் பறிமுதல் செய்தனர்.
தியானேஸ்வரன் வழங்கிய வாக்குமூலத்தின் படி, போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தில் தொடர்புடைய சரத், சீனிவாசன், சர்புதீன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து உயர்தர கஞ்சா, LSD உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சர்புதீன், அதிமுக வியூக வகுப்பின் கீழுள்ள PSybe Labs Private Limited நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
இதே வழக்கில், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் மற்றும் சாய் ஆகியோரும் தற்போது போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் சென்னை நகரில் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்கும் நடவடிக்கைக்கு புதிய திருப்பமாக கருதப்படுகிறது.
#DrugSeizure
#LSDStamp
#HighQualityDrugs
#DrugMafia
#ChennaiPolice
#CrimeAlert
#AntiNarcotics
#AnnaNagar
#ChennaiCity
#TNPolice
#InvestigationUpdate
