🗞️ பெரம்பலூர் அருகே அரசு பேருந்து முற்றுகை

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெருமத்தூர் கிளியூர் கிராமத்தில் அரசு பேருந்து வழித்தட நீட்டிப்பை கண்டித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று பேருந்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்து தாமதமாக வருவதால் பள்ளி நேரம் பாதிக்கப்படுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த குன்னம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, நாளை முதல் பேருந்து பழைய வழித்தடத்தில் இயக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

#Perambalur#SchoolStudentsProtest#BusRouteIssue#PublicTransport#StudentSafety#TNNews#BusBlockade#Kunnam#LocalNews