சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இளம் பெண் உயிரிழப்பு. உறவினர்கள் சோகம்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காமராஜர் நகரை சேர்ந்த செந்தில்நாதன் மகள் சினேகா (வயசு 23). இவரது அண்ணன் கண்டவராயன்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு, திருப்பத்தூரில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, திருப்பத்தூரில் இருந்து பொன்னமராவதி நோக்கி சென்ற அரசு பேருந்து உடையநாதபுரம் விலக்கு பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் வந்த சினேகா மீது மோதியதில் சினேகா சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

தகவல் அறிந்து வந்த கண்டவரயான்பட்டி போலீசார், சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இளம் பெண் உயிரிழப்பு. உறவினர்கள் சோகம்.