திருப்பூர் திருப்பூர் மாநகர் 19வது வார்டு கொங்கு நகர் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளாக டாஸ்மாக் கடையானது செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீப காலமாக பல்வேறு அமைப்புகள் மூலம் இங்கு டாஸ்மார்க் கடை செயல்படுவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்றும் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கிறது என்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வழங்கப்பட்டுள்ள வந்தது, இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில், கொங்கு நகர் 19வது வார்டு பகுதியில் உள்ள பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் மதுபான கடையால் எங்களுக்கு எந்தவித தொந்தரவும் இல்லை என்றும், அங்கு டாஸ்மாக் கடை இருப்பதால் அதிக மக்கள் நடமாட்டம் இருப்பதால் எங்களுக்கு இரவு வேலைகளில் திருட்டு பயம் இல்லாமல் இருப்பதாகவும், ஒரு சிலர் அரசியல் லாப நோக்கத்திற்காக இங்கு டாஸ்மார்க் கடை இருக்கக் கூடாது என்று பொய்யான தகவல்கள் பரப்பி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அழைத்து வருவதாகவும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு பொய்யான புகார்கள் அளிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அங்கு டாஸ்மார்க் கடை இருப்பதால் எந்த சிக்கலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
