சோழவரம் அருகே தீபாவளி சீட்டு வசூலித்து சுமார் 78 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த பெண் கைது. குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை. கணவருக்கு போலீஸ் வலைவீச்சு.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த செம்புலிவரம் கிராமத்தை சேர்ந்த பவானி (35) என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு மற்றும் நகை சீட்டு நடத்தி வந்துள்ளார். கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 50க்கும் மேற்பட்டோரிடம் பணத்தை வசூலித்த பவானி மற்றும் அவரது கணவர் சங்கர் சுமார் 78 லட்ச ரூபாய் வரை மோசடி செய்து விட்டு கொடுக்காமல் தலைமறைவாகி விட்டதாக ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில் குற்றப் பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் மோசடி வழக்கு பதிவு செய்த ஆவடி மாநகர குற்றப்பிரிவு போலீசார் சென்னை வேலப்பன்சாவடியில் பதுங்கி இருந்த பவானியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள அவரது கணவர் சங்கரை தேடி வருகின்றனர்