காங்கேயம் அருகே வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகேர் சூலக்கல்புதூரை சேர்ந்தவர் சிதம்பரம். விவசாயியான இவர் கோழி, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்தார்
இந்நிலையில் இன்று அதிகாலை இவரது பட்டிக்குள் புகுந்த வெறிநாய்கள் பட்டியில் இருந்த 6 ஆடுகளை கடித்து கொன்றது.
மேலும் 2 ஆடுகள் காயமடைந்தன
இது குறித்து வருவாய் மற்றும் கால்நடைத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
