திண்டிவனம் அடுத்த நொளம்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம் பி நிதியிலிருந்து ரூபாய் ஏழு லட்சம் மதிப்பிலான உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இதனை இன்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி திறந்து வைக்க வருகை தந்த போது கிராம பொதுமக்கள் சௌமியா அன்புமணிக்கு உற்சாக வரவேற்பளித்தனர் ஆர்த்தி எடுத்தும் பூ கொடுத்தும் உற்சாக வரவேற்பளித்தனர் மேலும் மின் கோபுரத்தை திறந்து வைத்த பின்பு பொதுமக்களிடையே பேசினார்.

அப்பொழுது அவர், கடந்த காலங்களில் தாய் மார்களின் மகப் பேறு காலத்தின் போது மாட்டு வண்டி, இருசக்கர வாகனம் ஆகியவற்றில் அவர்களை அழைத்துச் செல்லும் நிலை இருந்தது. இதனை மாற்றி நமது தலைவர் அன்புமணி ராமதாஸ் அமைச்சராக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தார் .

தற்போது முதல் அந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்று கூறிய சௌமியா அன்புமணி, இது போன்று பல்வேறு திட்டங்களை தமிழ் நாட்டிற்கு கொடுக்க தயாராக இருக்கின்றோம்.எனவே ,அனைவரும் ஒன்றுபட்டு மாம்பழம் சின்னத்தையும், மூவர்ணக் கொடியையும் மறக்காமல் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் .

அவர் பொதுமக்களிடையே பேசும் போது, பல முறை உற்சாகமாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் என்று பேசியதோடு, அவருக்கு நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா ?
என்ற வினாவையும் தொடுத்தார் .