சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்அருகே
சிலநீர்பட்டி ஆற்று பாலத்தின் அருகே எஸ்வி.மங்களம் வனப்பகுதியிலிருந்து சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் தண்ணீர் அருந்த பாலத்தின் அடிப்பகுதியில் வந்தது அப்போது சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மான் மீது மோதி உயிரிழந்தது.
கிராம மக்கள் தந்த தகவலின் அடிப்படையில் எஸ்வி.மங்களம் காவல்துறையினர் விரைந்து வந்து சாலை ஓரத்தில் இறந்து கிடந்த மானை அப்புறப்படுத்தி பிரான்மலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் சிங்கம்புணரி சாலையில் அடிக்கடி மான்கள் அடிபட்டு இறப்பது தொடர்கதையாக உள்ளது எஸ்வி மங்கலம் வனப்பகுதிகளில் அதிகமான புள்ளி மான்கள் இருப்பதால் மான்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த செய்ய வேண்டும், வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
