சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் ஊராட்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி வாழப்பாடி விளையாட்டை சங்கம் சார்பில் ஏற்பாடு செய்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்து நடைபெற்ற போட்டியை வாழப்பாடி வட்டார அட்மா திட்ட குழு தலைவர் சக்கரவர்த்தி துவக்கி வைத்து காலை முதல் மாலை வரை மாணவ மாணவியர்கள் இடையே போட்டிகள் நடைபெற்று வருகிறது

இதில் வாழப்பாடி அதன் சுற்றுவட்டார் பகுதியில் இருந்தும் மாவட்ட அளவில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், சிறுவர்கள் மாணவிகள் கலந்து கொண்டு ஓட்டப்பந்தயம் நீளம் தாண்டுதல் குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று வருகின்றனர் இங்கு போட்டிகள் மூலமாக தேர்வு செய்து அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் கோப்பைகள் வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.