விராலிமலை லோடு வாகனத்தில்(407) ரகசிய அறை வைத்து ஹான்ஸ் உள்ளிட்ட 500 கிலோவுக்கு அதிகமான தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்ல முயன்ற கர்நாடகா மாநில இளைஞரை மடக்கிப்பிடித்து கைது செய்த விராலிமலை போலீசார்புதுக்கோட்டை மாவட்டம் ,விராலிமலை-திருச்சி சாலை பூதகுடி சுங்கச்சாவடியில் விராலிமலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட 407 வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் ரகசிய அறை வைத்து 500 கிலோவுக்கும் அதிகமான ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனைக்காக கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது இதை தொடர்ந்து வாகனம் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த நவீன் குமார்(35) என்பவரை கைது செய்து விராலிமலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
