கொடைக்கானலில் மூன்றாம் நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு நடிகர் விஜய் தாண்டிக்குடி கிராமத்தில் ரோடு ஷோ.மாலை அணிந்தவாறு மக்களிடம் கை அசைத்தவாறு மக்களிடம் கை அசைத்து தனியார் விடுதிக்கு சென்றார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக ஜனநாயகம் திரைப்படம் படப்பிடிப்பு நடந்து வருகிறது…
இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய 69 ஆவது படத்தில் நடிக்கவும் நடிகர் விஜய் கொடைக்கானலுக்கு கடந்த மே ஒன்றாம் தேதி வருகை புரிந்தார் …
கடந்த மூன்று நாட்களாக படப்பிடிப்பு நடந்து வரக்கூடிய நிலையில் முதல் நாள் காரில் அமர்ந்த வாரே மக்களை சந்தித்த விஜய் , நேற்று திறந்த வெளி வாகனத்தில் பயணம் மேற்கொண்டார் இந்நிலையில் இன்று கதவுமலை என்ற வனப் பகுதியில் படப்பிடிப்பு வந்து நிலையில் படபிடிப்பு முடிந்து சுமார் நான்கு மணிக்கு நடிகர் விஜய் தாண்டி குடி கிராம வழியாக வந்தார் அப்போது வாகனத்தில் இருந்து ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்து சென்றது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது..m இந்நிலையில் ரசிகர்கள் அணிந்த மாலையுடன் தாண்டி குடி கிராமத்தை ஊர்வலமாக சென்று தனியார் விடுதியை சென்றடைந்தார்…
மேலும் விஜய காண்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் ரசிகர்கள் தாண்டி குடியில் குவிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
