கோவை வெள்ளிங்கிரி கோயிலில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக, இரண்டாவது கும்கி யானை வரவழைப்பு.
கோவையில் பிடிபட்டு கும்கியாக மாற்றப்பட்ட சின்னத் தம்பி யானை, காட்டு யானையை விரட்ட வந்துள்ளது.

கோவை வெள்ளிங்கிரி மலையேற்றத்திற்கு கடந்த பிப்.1 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பூண்டி வனப்பகுதியில் இருந்து கடந்த சில வாரங்களாக வெளியே வரும் காட்டு யானை, வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் பகல் நேரங்களிலும் வந்து கடைகளை சேதப்படுத்துகிறது.

இதனால் பக்தர்கள் பாதுகாப்புக்காகவும், காட்டு யானையை விரட்டவும் நரசிம்மன் என்ற கும்கி யானை கடந்த வாரம் வரவழைக்கப்பட்டது.
இந்நிலையில் கூடுதலாக சின்னத்தம்பி கும்கி யானையும் வெள்ளிங்கிரி கோயிலுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.மே.31 வரை அதிகளவு பக்தர்கள் வர உள்ளதால் வனத்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர்.சின்னத்தம்பி கும்கி யானை, தடாகம் பகுதியில் விவசாய நிலங்களுக்குள் சென்று சேதப்படுத்தி வந்ததால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பிடிக்கப்பட்டு, கும்கியாக மாற்றப்பட்டது.