திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கடைவீதி பகுதியில் நேற்று இரவு வடமாநில இளைஞர்கள் இருவர் சந்தேகப்படும்படி அனைத்து கடை மற்றும் வீடுகளை நோட்டமிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை பசீர் என்பவர் தனது வீட்டின் மாடிக்கு சென்ற போது அங்கு ஒரு வடமாநில இளைஞர் மது போதையில் தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை அடுத்து அருகில் இருந்தவர்களின் உதவியோடு அந்த வடமாநில இளைஞரை எழுப்ப முயன்றனர் ஆனால் அவர் மது போதையின் ஆழ்ந்து உறங்கி விட்டார்.
மேலும் பசீர் என்பவரின் வீட்டின் அருகே உள்ள ஜவுளிக்கடையின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளார்.
இதுகுறித்து பசீர் வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேடசந்தூர் போலீசார் அந்த வட மாநில இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடை வீதியில் திருட வந்த இடத்தில் மது போதையில் வட மாநில இளைஞர் தூங்கிய சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
