.

தமிழ்நாடு ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் பெரியபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது ஆந்திராவிலிருந்து தமிழ்நாடு நோக்கி வந்த 2 இருசக்கர வாகனங்களை மடக்கி சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட கஞ்சா பண்டல் பண்டலாக இருந்து தெரியவந்தது இதனை அடுத்து ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதனை கடத்தி வந்த வெள்ளிவாயல்சாவடி சேர்ந்த மது , ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் சேர்ந்த அஜித், டில்லிபாபு , வினோத் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரியபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
