அந்த தடுப்பு சுவர் கடந்த வருடம் வெள்ளப்பெருக்கின் போது ஆயிரம் மீட்டர் அளவிற்கு ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் சலவைத் தொழிலாளர் குடியிருப்பில் தண்ணீர் சூழ்ந்தது மட்டுமல்லாமல் 2 உயர் மின்னழுத்த கோபுரங்கள் சாய்ந்தன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அப்போது அழகிரி புரம் சுற்றிய நான்கு வீடுகளின் ஒரு பகுதி தண்ணீர் சூழ்ந்தது மட்டுமல்லாமல் 30 அடி அகலத்திற்கு 800 மீட்டர் தூரத்திற்கு கரை உடைந்தன.
இதனால் சலவைத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இடிந்த தடுப்பு சுவரை கட்ட வேண்டும், மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் இலட்சக்கணக்கான கடலில் தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது இதனை தடுப்பதற்கு 10 கிலோமீட்டர் ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும், காவிரி அய்யாறு திட்டம் 50 ஆண்டுகளுக்கு முன்பு பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டு இதுவரை செயல்படுத்தவில்லை அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும், சலவை தொழிலாளர்களுக்கு படித்துறை கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் அப்பகுதி பொதுமக்கள் சலவை தொழிலாளர்கள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி கழுத்தளவு தண்ணீரில் நின்று கோஷங்களை எழுப்பி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
