பெற்றோர் இன்றி தவிக்கும் இரு குழந்தைகள்
வால்பாறை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (38), வினோபா (32).இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 15 மற்றும் 12 ஆகிய வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.திருப்பூரில் சொந்தமாக கார்த்தி டாட்டா ஏசி வாகனம் ஓட்டி வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த ஓராண்டாக பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி கிராமத்தில் கார்த்தியின் சகோதரி காயத்ரி மற்றும் அவரது கணவர் கணபதி ஆகியோர் நடத்தி வந்த ஹோட்டலில் தங்கி கார்த்தியும் வினோபாவும் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு வழக்கம் போல அன்றாட பணிகளை முடித்துவிட்டு கார்த்தி மற்றும் அவரது உறவினர்கள் உணவகத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் கார்த்தியின் மைத்துனர் கணபதி உள்ளே சென்று பார்த்ததாக தெரிகிறது.
அப்போது கணவன் – மனைவியான கார்த்தி மற்றும் வினோபா தூக்கில் தொங்கியபடி சடலங்கலாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், தூக்கில் தொங்கிய சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து ஏ எஸ் பி சிருஷ்டி சிங் நேரில் பார்வையிட்டு தம்பதியரின் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
ஒரே நேரத்தில் தாய் மற்றும் தந்தை உயிர் இழந்ததால் குழந்தைகள் இருவரும் பெற்றோரை இழுந்து தவிப்பது அப்பகுதியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்திக்கும் வினோபாவிற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் இருவரும் ஒன்றாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
