திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள பூலுவப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள் அப்பள்ளியில் இன்று பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது .

இந்த உணவு திருவிழாவில் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் சுமார் 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை தங்களது பெற்றோர்களின் உதவியோடு தயார் செய்து கொண்டு வந்திருந்தனர்.இந்த உணவு திருவிழாவில் சிறுதானிய உணவுகள்,புவி சார் உணவுகள் ,அடுப்பு எண்ணெய் இல்லாமல் சமையல்,கூல் கூழ் என 11 க்கும் மேற்பட்ட குடில்கள் அமைக்கப்பட்டு அதில் உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டது.

வைக்கப்பட்ட உணவுகளை பெற்றோர்கள் மாணவி மாணவர்கள் ஆர்வமாக ருசித்து மகிழ்ந்தனர்.உணவுத் திருவிழா என முளைப்பாரி இட்டிருந்தனார்,மேலும் குழந்தைகளை கைவண்ணத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.தொடர்ந்து இதேபோல அடுத்த வருடமும் உணவுத் திருவிழா நடைபெறும் என பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார்