திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரில்பழமை வாய்ந்த அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் அக்கினி வசந்த விழா முன்னிட்டுகடந்த 30 நாட்களாக மகாபாரத சொற்பொழிவு நாடகமும் நடைபெற்றது. இன்றுகாலை ஆலை வளாகத்தின் எதிரே 90 அடி பிரமாண்டமான துரியோதனன் சிலை அமைத்து நாடக நடிகர்கள் துரியோதனன் வீழ்ச்சி நாடகத்தை நடத்தி காட்டினர்.

இதில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணிவேந்தன்,வந்தவாசி தொகுதி எம்எல்ஏ அம்பேத்குமார் முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங்கன் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.