திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த அய்யம்பாளையத்தில், சுரேஷ், ஶ்ரீதர் ஆகியோருக்கு சொந்தமான பனியன் நிறுவனமானது 35,000 சதுர அடி பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பேப்ரிக், பேக்கிங், ஸ்டிச்சிங் என பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை பனியன் நிறுவனத்தில் இருந்து புகை வருவதை பனியன் நிறுவன காவலாளி இது குறித்து உரிமையாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவலளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பணியன் நிறுவனத்திலிருந்து பின்னலாடை இயந்திரங்கள் மற்றும் துணிகள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் ஆகி இருக்கலாம் என கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா ? அல்லது வேறு ஏதாவது காரணமா என பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
