திருப்பூர்..

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் தொழில் துறைக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த மத்திய பட்ஜெட்டை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் திருப்பூர் ஏற்றுமதி AI சார்ந்த புதிய தொழில்நுட்பங்களை தொழில்களில் புகுத்துவதற்கும், இருக்கின்ற தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவதற்கும் ஒரு மானிய திட்டத்தை மத்திய அரசிடம் கோரிக்கையாக விடுத்திருந்தோம் ஆனால் நடப்பு பட்ஜெட்டில் அதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. அதேபோல் வட்டி சமன்படுத்தும் திட்டம் மூலம் சிறு குறு நிறுவனங்களுக்கு 5% மற்ற நிறுவனங்களுக்கு 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கி வந்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்த இத்திட்டம் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. தற்போதுள்ள போட்டி சூழலை சமாளிக்க மீண்டும் வட்டி சமன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதோடு 3 சதவீதம் மானியம் என்பதை சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனம் மற்றும் ஏற்றுமதி என அனைத்து சார்பினருக்கும் 5 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ன விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சரை திருப்பூர் தொழில் துறையினர் நேரில் சந்தித்து மீண்டும் முறையிட உள்ளோம் விரைவில் எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.