திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பு பற்றாக்குறை காரணமாக பெற்றோர்களிடம் கருத்து கேட்டு கூட்டம் நடைபெற இருப்பதாக பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கருத்து கேட்டுக் கூட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் நியாயம் கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் கருத்து கேட்டு கூட்டத்திற்கு முதன்மை கல்வி அலுவலர் வர இருந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தற்போது காவல்துறையினர் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தை உடன்படாததால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்
திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பு பற்றாக்குறை காரணமாக பெற்றோர்களிடம் கருத்து . பேச்சுவார்த்தை உடன்படாததால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்
