திருப்பூர்: சாய ஆலை கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆலை உரிமையாளர், பொது மேலாளர் மற்றும் லாரி ஓட்டுநர் ஆகியோர் மீது பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் கரைப்புதூர் பகுதியில் நவீன் என்பவருக்கு சொந்தமான ஆலயா சாய ஆலையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய பாதுகாப்பற்ற முறையில் 4 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் விஷவாயு தாக்கியதில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சரவணன், வேணுகோபால் என்ற இருவர் உயிரிழந்த நிலையில் ஹரி கிருஷ்ணன், சின்னசாமி என்ற இருவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஹரி கிருஷ்ணன் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் விஷவாயு தாக்கிய சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஆலை உரிமையாளர் நவீன், அவரது தந்தை பாலசுப்பிரமணியம்பொது மேலாளர் தனபால், லாரி ஓட்டுநர் சின்னசாமி, ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு.
கவனக்குறைவாக இருந்து உயிர் இழப்புஏற்படுதல்.
மனிதக் கழிவுகளை மனிதனே விட்டு அள்ளியது.
மனித கழிவுகளை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் வைத்து அள்ளியது
மூன்று பிரிவுகள் வழக்கு பதிவு.