திருப்பூர்: மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக இருந்த புகார் கலக்கப்படவில்லை என தண்ணீரை குடித்து நிரூபித்த மண்டல தலைவர் மற்றும் கவுன்சிலர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு பகுதியில் உள்ள கவுண்டநாயக்கன்பாளையம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி 17.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டது இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இளைஞர்கள் சிலர் மேலே சென்று மது போதையில் வாந்தி எடுத்து மனித கழிவுகளை தொட்டியில் உள்ள நீரில் கலந்ததாக புகார் எழுந்தது.
மது போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் மூன்று பேர் தப்பி ஓடிய நிலையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் நிஷாந்த் (19), சஞ்சய் (22) என்பது தெரியவந்தது. இருவர் மீதும் பொது சொத்துக்களை சேதப்படுத்திய பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் தப்பி உடைய மூன்று பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ஆறாவது வார்டு கவுன்சிலர் கோபால் சாமியிடம் செல்போனில் அழைத்து கேட்டபோது மேலே பால் பாக்கெட் இருந்ததாகவும் தொட்டியின் மீது மலம் இருந்ததாகவும் உடனடியாக அவை சுத்தம் செய்யப்பட்டு அகற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார் மேலே இருந்த மனிதக் கழிவு தண்ணீரில் கலக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதியில் தகவல் பரவியதை தொடர்ந்து தண்ணீர் தொட்டி முன்பாக ஏராளமான திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
மேலும் நேற்று அனைவருக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டதாகவும் மலம் கலந்த நீர் திறந்து விடப்பட்டு விட்டது என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர் மேலும் இன்று காலை மீண்டும் மேல்நிலை நீர் திறக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வந்ததை எதிர்த்து பொதுமக்கள் திரண்டதால் உடனடியாக தண்ணீர் ஏற்றம் நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டேப் இன்ஸ்பெக்டர் சுகுமார் மனிதக் கழிவுகள் எதுவும் கலக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையில் நீர் தேக்க தொட்டி சுத்தம் செய்து பின்னர் தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து அங்கு வந்த இரண்டாவது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் மற்றும் ஆறாவது வார்டு கவுன்சிலர் கோபால்சாமி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது மனிதக் கழிவுகள் தண்ணீரில் கலக்கவில்லை எனவும் இதே தண்ணீரை தான் நாங்கள் அனைவரும் கொடுக்கிறோம் எனவே அது போன்று எந்த சம்பவமும் நிகழவில்லை இருநூறு சதவிகிதம் மனித கழிவுகள் தண்ணீர் தொட்டியில் கலக்கப்படவில்லை என தெரிவித்தார் தொடர்ந்து பொதுமக்கள் அச்சம் தெரிவித்த நிலையில் தண்ணீர் தொட்டியில் இருந்து கொண்டுவரப்பட்ட நீரை பொதுமக்கள் முன்னிலையில் மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் மற்றும் ஆறாவது வார்டு கவுன்சிலர் கோபால்சாமி இருவரும் குடித்து மனித கழிவுகள் கலக்கப்படவில்லை என நிருபித்தனர்.
மேலும் தண்ணீர் தொட்டி இருக்கு உரிய முறையில் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து அப்பகுதியில் திரண்டு இருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
