திருப்பூர்: சிந்தூர் ஆப்ரேஷன் வெற்றியை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் தேசிய கொடி ஊர்வலம். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை பங்கேற்பு‌.

சிந்தூர் ஆப்ரேஷன் வெற்றியை கொண்டாடும் வகையிலும் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து மரியாதை செலுத்தும் விதமாக திருப்பூர் குமரன் சிலை முன்பிருந்து மாநகராட்சி வரை கொடி பேரணி துவங்கியது. பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பிரம்மோஸ் ஏவுகணை மாதிரியை வாகனத்தில் வைத்து பேண்டு வாத்தியங்கள் முழங்க முன்னாள்‌ ராணுவ வீரர்களும் பங்கேற்கின்றனர். இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை சேர்ந்து பேரணியை துவக்கி வைத்தனர். மாநகராட்சி வரை ஊர்வலமாக வந்து ஆப்ரேஷன் சித்தூர் நடவடிக்கையின் போது உயிர்த்தியாகம் செய்த 5 பேருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில்
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட வேண்டும். அடுத்த கட்ட இந்தியர்களான குழந்தைகளுக்கு கொடி ஊர்வலத்தை காட்ட தேசிய உணர்வை காட்ட இந்த ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதனை பார்த்த இளைஞர்கள் நாட்டுக்கு தங்களை அர்ப்பணிக்க எண்ணம் ஏற்படும். இந்த தேசிய கொடி பேரணிக்கு வருண பகவான் வழி விட்டுள்ளார்.

தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை முகமது அலி ஜின்னா விடுத்தார். பக்கத்து நாட்டை சேர்ந்தவர்களை நாம் சகோதரர்களாக பார்த்தாலும் அவர்கள் பிரச்சினை செய்து வருகின்றனர். 72 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ளது. தொடர்ந்து யுத்தமாக நடத்தி நமது மக்களை கொன்று வருகிறார்கள். எல்லை கடந்த பிரச்சனை செய்து வருகிறார்கள். எத்தனை முறை நம்மிடம் பட்டாலும் திரும்பி வருகின்றனர்.
நாம் அண்ணன் தம்பிகளாக வாழ்கிறோம். பஹல்காமில் திவிரவாதிகள் அமரவைத்து நெற்றி பொட்டில் சுடுகின்றனர். அங்கு கணவரை சுட்ட பின்னர் அந்த பெண்ணிடம் மோடியிடம் சொல் என்று சொன்னார்கள். நாம்மால் பாகிஸ்தானில் எதையும் செய்ய முடியும் என்பதை காட்டி உள்ளோம். எல்லையில் இருந்து 100 கிலோ மீட்டர் தாண்டி தாக்கி உள்ளோம். எங்கள் நோக்கம் தீவிரவாதத்தை அழிப்பது மட்டும் தான் பொதுமக்கள் மீது தாக்குதல் இல்லை என சொன்ன பிறகும் பாகிஸ்தான் காஷ்மீரில் பொதுமக்கள் வாழும் பகுதிகளை தாக்கினர். இதில் 16 இந்தியர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து ராவல்பிண்டி, கராச்சியில் பாதுகாப்பு படை மீது தாக்கினோம். இதன் பிறகே பாகிஸ்தானுக்கு புத்தி வந்து உலக நாடுகளை கெஞ்சி அழைத்து பேசி தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.
சண்டை நிறுத்தப்படவில்லை. இது தற்காலிக நிறுத்தம் மட்டுமே. இனி பாகிஸ்தான் செய்யும் எந்த செயலும் போராக மட்டுமே பார்க்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. போர் என்றால் வீர மனிதர்கள் கொல்வப்படுவதை பார்த்திருக்கிறோம்.

நாம் போருக்கு தயாராக இருக்கின்றோம். போரை விரும்பவில்லை என்றாலும் போர் ஏற்பட்டால் எதையும் இழக்க தயாராக உள்ளோம்.

அனைத்து கட்சியினரும் நம்மோடு கலந்து நின்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

குழந்தைகளுக்கு இந்திய தேசத்தை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.

இந்த கொடி பேரணி நம்மை ஓரிடத்தில் ஒருங்கிணைத்து உள்ளது.
நமது நாட்டில் இந்து முஸ்லிம் பிரச்சனையை உருவாக்கவே பஹல்காமில் எந்த மதம் என கேட்டு கொலை செய்துள்ளனர். ஆனால் நமதூ ஒற்றுமை மூலம் அனைவரும் இந்தியர் என்பதை உணர்த்தி உள்ளோம்.

இந்த முறை பாகிஸ்தான் மக்களுக்காக பிரதமர் மன்னித்து உள்ளார்.

பாகிஸ்தான் கையில் தான் உள்ளது. அமைதியை விரும்புகிறார்களா? போரை விரும்புகிறார்களா? என பேசி பேச்சை நிறைவு செய்தார்

இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில்

கடைசியாக பேச வருவதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் எல்லாவற்றையும் தலைவர் பேசி விடுவார். அவர் இதில் புலி. சாப்பிட்டு முடித்து வெற்றிலை போடுவது போல நான் வெற்றிலை தான் போட வேண்டும். அவர் செண்டை மேளம் அடித்து முடித்துவிட்டார் நான் வெறும் மேளம் தான்.
திருப்பூர் மண்ணுக்கு தேசிய உணர்வு அதிகம். அனைவர் கையிலும் தேசிய கொடி இருந்தது. மாவீரன் கொடிகாத்த குமரன் பிறந்த மண் அல்லவா.

இந்தியாவில் மதக்கலவரத்தை தூண்டவே பஹல்காமில் திவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டது. மாமன் மச்சான் போல் உள்ள இந்தியாவில் பகைமையை ஏற்படுத்தவே தாக்குதல் நடத்தப்பட்டது.

அடித்த பின்னர் சிந்தூர் என பெயர் வைத்தார். இரண்டு பெண்களை அனுப்பி பாகிஸ்தானை நடுங்க வைத்தவர் மோடி.

அன்புக்கு அன்பு. ரத்தத்திற்கு ரத்தம். பழிக்கு பழி என காட்டி விட்டார் மோடி.
எந்த நாடும் சிறு கண்டனம் தெரிவிக்காததன் காரணம் மோடி பிரதமர் மோடி நாடு நாடாக சுற்றிய தன் விளைவே நமக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு.

நம்முடைய நாட்டில் எல்லோர்க்கும் தேச பக்தி உள்ளது. தமிழகத்தில் ஒரு சிலர் சமூக வலைதளங்களில் ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்பட்ட கதையாக பேசுகின்றனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாமே. இதை பற்றி பேசினால் புதிய பாஜக தலைவர் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசுகின்றனர்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக தினமும் விவாதம் நடைபெறுகிறது. சமூக வலைதளங்களில் ஆதரவு கருத்துக்கள் பரப்பப்படுகிறது. தமிழக முதலவர் இதனை கண்டிக்க வேண்டும். கண்டிக்க தவறும் பட்சத்தில் அவரும் பாகிஸ்தானுக்கு ஆதரவு என்று தான் நாம் எடுத்துக் கொள்ள முடியும். வாஜ்பாய் சொன்னார் இந்தியாவில் ஒரு பகுதி போனால் பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்காது என அதனை மோடி செய்ய உள்ளார்.

இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு என்ற பாடலை பாடி பேச்சை நிறைவு செய்தார்.