திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வாவிபாளையம் பகுதியில் டயாப்பர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கட்டிட அனுமதியை ரத்து செய்ய கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் துவங்கிய நிலையில் அதிகாரிகள் யாரும் பேச்சுவாரத்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பல்லடம் உடுமலை பிரதான சாலையின் நடுவே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு. பல்லடம் டி.எஸ்.பி சுரேஷ் விவசாயிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்
