திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் 2024 25 ஆம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற 27 பள்ளிகளைச் சேர்ந்த 128 மாணவ மாணவியர்களுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் சுமார் 3.5 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகை மற்றும் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சங்கத்தின் கவுரவ தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் சக்திவேல் மற்றும் சங்கத்தின் தலைவர் கே எம் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தோய்க்கான காசோலை மற்றும் கேடயத்தினை வழங்கினர். மேலும் அனைத்து அரசு மேல்நிலை மற்றும்உயர்நிலைப் பள்ளிகளுக்குமான பாராட்டு சான்றுகளை ஆசிரியர்களிடம் வழங்கினர். திருப்பூரில் தொழிலும் தொழில்துறையும் வளர்ச்சி பெற்று பெருமை சேர்ப்பது போல மாணவ மாணவியர்களும் கல்வியில் மாநகருக்கு பெருமை சேர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
