திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் எட்டாவது வார்டு பகுதியில் குடிநீர் பைப்லைன் செல்லும் வழித்தடத்தில் சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடைபெறுவதாகவும் இதனால் குடிநீர் சுகாதாரமற்ற நிலை ஏற்படும் என்பதால் சாக்கடை குழாய் பதிக்கும் பணியை மாற்றி அமைக்க கோரி எட்டாவது வார்டு கவுன்சிலர் சுகன்யா தலைமையில் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பல்லடம் மங்கலம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது திமுக நிர்வாகி நிர்வாண போராட்டம் நடத்துவேன் என சட்டையை கழட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
