திருப்பூர் – தாராபுரம் சாலை, பெரிச்சிபாளையம் பகுதியில் நேற்றிரவு இருசக்கர வாகனம் ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் வாகனங்களில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமடைந்தவர்களை உடல்நிலையை பரிசோதனை செய்தனர். இதில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நல்லூரை சேர்ந்த சவுகத் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியை சேர்ந்த இளைஞர் மாதேஷ்குமார் மதுபோதையில் வாகனத்தை இயக்கியதில் இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என மாநகர வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . தொடர்ந்து சவுகத் அலி உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் மாதேஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் – தாராபுரம் சாலை, பெரிச்சிபாளையம் பகுதியில், சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். விபத்து தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி.
