திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளராக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி வீரமணி செயல்பட்டு வருகிறார்

திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கந்திலி ஒன்றிய கழக செயலாளராக இருந்த கே.ஜி.ரமேஷ் என்பவர் உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில்

மேலும் திருப்பத்தூர் மாவட்ட பாசறை செயலாளராக இருந்த சங்கர் என்பவரை அதிமுக மாவட்ட செயலாளர் கே சி வீரமணி பரிந்துரையின் பெயரில் கந்திலி ஒன்றிய கழகச் செயலாளராக பொறுப்பேற்றார் .
பொறுப்பேற்ற நாளிலிருந்து அதிமுக கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் உட்கட்சி பூசல் இருந்ததாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி, சார்பதிவாளர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் அருகே
கண்ணீர்அஞ்சலி,
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி கிழக்கு ஒன்றியம் அ.இ.அ.தி.மு.க இங்கனம் கந்திலி கிழக்கு ஒன்றியம் என போஸ்டர் ஒட்டிய அதிமுகவினரால் திருப்பத்தூர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.