திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை தலைவர் சுப்பராயுடு, எஸ்.பி. ஸ்ரீனிவாஸ் மற்றும் டிஎஸ்பி பாலிரெட்டி தலைமையிலான குழுவை சேர்ந்த ஆர்.ஐ. சாய் கிரிதர், ஆர்.எஸ்.ஐ. சி. வினோத் குமார் குழுவினர் நெல்லூர் மாவட்டம் ஆத்மகூர் வனப்பகுதியில் அனந்தசாகரத்தில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதி வன அதிகாரிகளுக்கு டி. ஸ்ரீனிவாஸ் மற்றும் சி.எச். ஸ்ரீனிவாஸ் ​​குடிகுண்டா பகுதியில் சிலர் ஒரு காரில் செம்மரக் கட்டைகளை ஏற்றுவதால அறிந்து அங்கு சென்று சுற்றி வளைத்தனர். இதில் சிலர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய நிலையில் நான்கு பேர் பிடிபட்டனர். பிடிபட்டவர்கள் சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 55 செம்மரக் கட்டைகள், ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் ஒரு டன் எடையுள்ள ₹ 60 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுடன் செம்மரக் கட்டைகளும் திருப்பதி அதிரடிப்படை காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.