விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை திருச்சி தேசி நெடுஞ்சாலையில் நீண்ட நாட்களாக சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் தகவல் பலகை இல்லாததால் மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து இரண்டு பேர் காயம் -போலீசார் விசாரணை.

சென்னையிலிருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது அப்போது திண்டிவனம் அருகே உள்ள சலவாதி அருகே சென்னையை திருச்சி நெடுஞ்சாலையில் நீண்ட நாட்களாக சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது இந்தநிலையில் அப்பகுதியில் தகவல் பலகை இல்லாததால் திருச்சி நோக்கி சென்ற கார் சென்டர் மீடியனில் மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த கார் முன்னாள் சென்ற கார் மீது பலமாக மோதியது

பின்னால் வந்த மற்றொரு கார் முன்னாள் சென்ற கார் மீது மோதியது இதில் மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதியதால் இரண்டிற்கும் மேற்பட்ட மேற்பட்டோர் சிறு காயங்களுடன் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த விபத்து குறித்து ரோஷனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் இந்த விபத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.