திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள நகராட்சி அலுவலகம் எதிரே திருப்பூர் சாலையில் கோவை வடக்கு மாவட்ட திருமுருகன்பூண்டி பாரதிய ஜனதா கட்சி சார்பாக நகராட்சி நிர்வாக முறைகேடுகளை கண்டித்தும், திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு நிரந்தர ஆணையரை அமர்த்த வலியுறுத்தியும், பொறுப்பு ஆணையரை வைத்துக் கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் தலைவர் துணைத் தலைவர் மற்றும் திமுக கவுன்சிலர்களை கண்டித்தும், கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் கரு மாரிமுத்து தலைமையில் கைகளில் திருவோடுகள் ஏந்தியவாறு கண்டன கோஷங்கள் முழங்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாகத்தில் மக்கள் நலத்திட்ட பணிகள் என்று செயல்படும் அனைத்து திட்டங்களிலும் மாபெரும் ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கு நகராட்சி தலைவர் திமுக துணைத்தலைவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் கூட்டாக மக்கள் வரிப்பணத்தை தங்களின் இஷ்டம்போல் கொள்ளை அடித்துக் கொண்டு வருகின்றனர்.

மேலும் நகராட்சியர் ஆணையர் பதவி திருமுருகன் பூண்டியை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரை நிரந்தர ஆணையரை அமர்த்தாமல் பொறுப்பு ஆணையரை வைத்துக்கொண்டு பல லட்சக்கணக்கான வரிப்பணங்களை சுருட்டி கொண்டிருக்கின்றனர்.

மேலும் திருமுருகன்பூண்டி நகராட்சி வரி மறுசீரமைப்புக்கு அரசாணை வெளியிடாத நிலையில் மறுசீராய்வு என்ற பெயரில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை அச்சுறுத்தி மறு அளவீடு செய்து வரியை உயர்த்தி பல கோடி ரூபாய் லஞ்சம் மூலம் முறைகேடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நகராட்சி மூலம் பிரதான குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் தரமான படிப்புகளை பயன்படுத்தாமல் தரம் குறைவான குழாய்களை பதித்த டெண்டர் எடுத்துள்ள உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் உள்ள பொதுமக்களுக்கான நலத்திட்ட பணிகளை சீராக செய்யாமல் அதில் ஒதுக்கப்படும் நிதியை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் பணியினை இனியும் நிறுத்தாவிடில் திருமுருகன் பூண்டி நகர பாஜக சார்பில் ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களை திரட்டி அந்தந்த வார்டு பகுதிகளிலேயே பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று கூறினார்.

முன்னதாக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருமுருகன் பூண்டி அவிநாசி சேவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் முழங்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.