கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநில பொது குழு கூட்டம் இன்று மாநில தலைவர் அருள் தலைமையில் நடைபெற்றது. மாநிலக் கொள்கை பரப்பு செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க சேவை மையம் கிராமங்கள் அளவில் ஏற்படுத்த வேண்டும். மூன்று அல்லது நான்கு கிராமங்களுக்கு ஒரு கிராம வேளாண்மை விரிவாக்க அலுவலர் பணியிடம் வழங்க வேண்டும். தமிழக முதல்வர் அறிவித்த உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 செயல்படுத்த வேண்டும். உதவி விதை அலுவலர்கள் பதவியின் பெயரை விதை உற்பத்தி அலுவலர் என மாற்றம் செய்து உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும். பணியிட மாறுதல்களை மாவட்ட, மண்டலம் வாரியாக புதிய மூதுரிமைப் பட்டியல் தயார் செய்து அதன்படி செயல்பட உத்தரவிட வேண்டும். வேளாண்மை உழவர் நலத்துறை திட்டப்பணிகளை டிஜிட்டல் சர்வீஸ் செய்யும் அரசின் கொள்கை முடிவுகளை காலநிலையில் பணிபுரிந்து வரும் உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு கூடுதல் ரேம் வசதியுடன் கூடிய தரமான கையடக்க கணினி அல்லது முன்னணி நிறுவன ஆண்ட்ராய்டு அலைபேசி வழங்க வேண்டும் என்றும் அதற்கான ரீசார்ஜ் தொகையும் வழங்க வேண்டும். உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களின் ஊதியத்தை நீதிமன்ற உத்தரவின் படி ஊதிய குறைதீர்க்கும் குழுவை அமைக்க வேண்டும். களப்பணியில் ஏற்படும் இடர்பாடுகளை களைய வேண்டும். வேளாண்மை துறையில் இரண்டு அடுக்கு தோட்டக்கலைத் துறையில் ஒரு அடுக்கு பதவி உயர்வு உள்ளது இதனால் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க சேவை
