தொடர்ந்து உற்சவமூர்த்திகள் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்று அருள்பாலித்தனர்.விழாவின் முக்கிய நிகழ்வான விஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் கூடிய விநாயகர் சிறிய தேரிலும் , ஸ்ரீ விஸ்வேஸ்வரர் ஆலய திருத்தேரில் சோமஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு தேருக்கு பூஜைகள் நடத்தப்பட்டு தேரோட்டம் துவங்கியது. இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் முன்னிலையில் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தமிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த சிவன்டியார்கள் கைலாய வாத்தியங்கள் இசைக்க , பெண்களின் கோலாட்டம் , கும்மியாட்டத்துடன் தேர் ரத வீதிகளில் வலம் வந்தது.முன்னதாக விநாயகர் வீற்றிருந்த தேர் ரத வீதிகளில் வலம் வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து ரத வீதிகளில் வலம் வந்து தேர்நிலை சேர்த்தனர். தேர் ரதம் வரும் வீதிகளில் ஈஸ்வரன் , பார்வதி மற்றும் அர்த்தநாரீஸ்வரர் வேடமிட்ட பக்தர்களும் , சிவன் வேடமிட்ட சிறுவன் கையில் உடுக்கையுடனும் , சைவ சமயத்தில் போற்றப்படும் சமயத்தை சேர்ந்தவர்களின் வேடமணிந்த பக்தர்களிடம் பொதுமக்கள் ஆசி பெற்றனர்.

