கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று மாலை பச்சைமலை எஸ்டேட்டில் சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமியை தேடும் பணி தற்போது விறுவிறுபடைந்துள்ளதுகாவல்துறை மோப்பநாய் வனத்துறை மோப்பனாய் பொதுமக்கள் உறவினர்கள் அரசுத்துறை குறிப்பாக வனத்துறை காவல்துறையினர் சிறுமியை தேயிலைத் தோட்டங்கள் அருகில் உள்ள வனப்பகுதியில் தேடி வருகின்றனர்இன்று அதிகாலை 2 மணி அளவில் வரை மரங்களில் சிறுத்தை சிறுமியின் உடலை வைத்துள்ளதா என்ற கோணத்தில் வனத்துறையினர் தேடி வந்தனர் மழைக்குறிப்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டது தற்போது சிறுமியின் கதி என்ன என்று தெரியாமல் தேடி வருகின்றனர்
