கோவை உக்கடம் பகுதியில் உள்ள எம்.எம்.ஆர். வெஜிடபிள் பிலால் எஸ்டேட் மெயின் ரோடு பகுதியில், சிறு குறு வியாபாரிகள் காய்கறி பழங்கள் உள்ளிட்டவற்றை விற்று வருகின்றனர். காலை முதல் நள்ளிரவுக்கு முன்னர் வரை வியாபாரம் செய்துவிட்டு கடைகளை அடைத்து செல்கின்றனர். மீண்டும் காலை வந்து தங்கள் வியாபாரத்தை வழக்கம் போல் ஆரம்பிப்பார்கள். இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் வந்த மர்ம நபர் ஒருவர், காய்கறி கடை ஒன்றில் காய்கறிகளை திருடிச் சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர், காய்கறிகளை பெட்டிக்குள் களவாடிய காய்கறிகளை போட்டு, தன் வாகனத்தில் கடத்தி சென்று விடுகின்றார். காய்கறி கொள்ளை சம்பவம், அக்கடை மேற்கூரையில் பொறுத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது.
