திருப்பூர் காங்கேயம் சாலை மணி மஹால் அருகே உள்ள டாலர் சிட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மகிசாசுரமர்த்தினி வாராகி திருக்கோவிலில் இரண்டாம் ஆண்டு ஆசாட நவராத்திரி விழா இன்று கணபதி ஹோமத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. காலை கணபதி ஓமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் வாராகி அம்மனுக்கு நடைபெற்றது, இதைத்தொடர்ந்து வேதங்கள் முழங்க, சங்கு ஒலியுடன் கொடியேற்றுதல் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து காப்பு கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர். வரும் ஜூலை 7ஆம் தேதி பொங்கல் வைத்து ஆசாட நவராத்திரி பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. மேலும் தினமும் மூன்று வேளையும் கால சாந்தி பூஜைகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளதாக கோவில் கமிட்டி னர் தெரிவித்தனர்.