ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 வது மாடியில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் நல அலுவலகத்தில் பணியாற்றி வரும் சாந்தி மற்றும் நாகராஜ் இருவரும் தரைத்தளத்தில் இருந்து மேல் நோக்கி சென்றுள்ளனர். மேலே சென்ற லிப்ட் எங்கும் நிற்காமல் மீண்டும் திரும்பி புறப்பட்ட இடத்திற்கு தரைத்தளத்திற்கு வந்தது. தரை தளத்திலும் அரை அடி கீழே இறங்கிய லிப்ட் கதவுகள் திறக்காததால், இருவரும் உள்ளே சிக்கிக் கொண்டனர். இது தொடர்பாக அவர்கள் செல்போன் மூலம் அளித்த தகவலின் பெயரில் லிப்ட் ஆப்ரேட்டர் மற்றும் போலீசார் கதவுகளை போராடி திறந்து அவர்களை வெளியே மீட்டனர். திங்கள்கிழமை அன்று குறைதீர் கூட்டத்திற்காக ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்த நிலையில் அரசு அலுவலர்கள் இருவர் லிப்ட் உள்ளே சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.