கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பெரிய மத்தம்பாளையம் கருப்புசாமி நகரில் கணேசமூர்த்தி என்பவர் தனது இடத்தில் வீடு கட்ட இன்ஜினியர் ஒருவர் மூலம் ஏற்பாடு செய்தார். கடந்த 5 மாதங்களாக வீடு கட்டப்பட்டு வந்தது.
இங்கு வேலை செய்ய மதுரை வண்டியூரை சேர்ந்த 29 வயதான இளங்கோவன் என்பவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு வந்துள்ளார்.
இவர் கட்டிடத்தில் மேசன் வேலை செய்துக்கொண்டு அந்த கட்டிடத்திலேயே தங்கியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டை பார்க்க வீட்டின் உரிமையாளர் கணேசமூர்த்தி வந்துள்ளார். அப்போது கட்டப்பட்டு வரும் வீட்டிற்குள் இளங்கோவன் தலை, முகத்தில் ரத்த காயத்துடன் இறந்த கிடந்தான்.
அதிர்ச்சி அடைந்த கணேசமூர்த்தி பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விச விசாரணை நடத்தினர்.
தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ஹீரோ வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர்.
இந்த நிலையில் இறந்துகிடந்த இளங்கோவன் அருகில் ஓரு செல்போன் கிடந்துள்ளது.

அதனை வைத்துபோலீசார் துப்பு துலக்கினர். இதில் அந்த செல்போன் தஞ்சாவூர் பண்ணை நல்லூரை சேர்ந்த சந்தரன் என்பவரின் மகன் 34 வயதான ராஜா என்கிற ராக்கெட் ராஜாவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து செல்போனுக்குரிய ராஜாவை பிடித்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

அப்போது இளங்கோவன் மற்றும் ராஜா இருவரும் நண்பர்கள் என்றும், இருவரும்

கோவையில் வெவ்வேறு இடங்களில் கட்டிட தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் ராஜா தனது செல்போன்னை நண்பரான இளங்கோவனிடம் ரூ.2 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளான்.

பணம் திருப்பி தராமல் செல்போன்னை ராஜா கேட்டுவந்துள்ளான்சம்பவத்தன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இளங்கோவன் வேலை செய்யும் கட்டிடத்தில் அமர்ந்து இருவரும் மது அருந்தி உள்ளனர்
அப்போது செல்போன் ராஜா கேட்கவ இளங்கோவன் பணம் கொடுத்தால் தான் தருவே என்று கூறியுள்ளான். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது
ஆத்திரமடைந்த ராஜா, இளங்கோவனின் தலை மற்றும் முகத்தில் கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து ராஜாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி
கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.