கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு விவசாயிகளை பாதிக்கக்கூடிய வகையில் நெல் கொள்முதலை தனியார் ஒன்றிய அரசின் உத்தரவை ரத்து செய்திட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நெல் கொள்முதலை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொடர்ந்து விவசாயிகளை வஞ்சிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்