தமிழகம் முழுவதும் கல்லூரி வாயில்களில் திமுக அரசு உயர் கல்விக்கு கொண்டு வந்த திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுக்கும் நிகழ்வை திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி துவங்கி வைத்தார்.

கோவை அரசு கலைக் கல்லூரி நுழைவு வாயிலில் திமுக அரசு கல்விக்கு கொடுக்கும் முக்கியதுவம் குறித்து எடுத்துரைக்கின்ற வகையிலான நோட்டீஸை மாணவர்களுக்கு ரஜீவ் காந்தி வழங்கினார்.

இதே போல மாநிலம் முழுவதும் சுமார் 2,500 க்கும் மேற்பட்ட கல்லூரி நிழைவு வாயில்களில் நோட்டீஸ்கள் விநியோகிக்க உள்ளதாக தெரிவித்தனர்.தெரிவித்தனர்.