செங்கம் நகரில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஶ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் உள்ள சேயாற்று நதிக்கு தென்பாகத்தில் தளவநாயக்கர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட 800 ஆண்டுகள் மிகப் பழமையான கோயிலில் அருள்பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி சுவாமி, கனகவல்லி தயார், ஆண்டாள், ஆழ்வார்கள், விஷ்வக்ஸேனர், ராமானுஜர் மற்றும் ராஜகோபுரம் விமான கோபுரங்களை சிற்ப வேலைகள் செய்து வண்ணம் பூசப்பட்டு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேக பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேகத்தை காண செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்தனர்.

கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு
மூன்று நாட்களாக
யாக சாலைகள் அமைக்கப்பட்டு, முதல் காலையாக பூஜை இரண்டாம் காலையாக பூஜை, கோமாதா பூஜை,
சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டு சுப்ரபாதம் திருப்பள்ளி எழுச்சி, அக்னி ஆராதனை உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து முக்கிய விழாவான கும்பாபிஷேக நாளான இன்று காலை 5 மணிக்கு சுப்ரபாதம் விஸ்வரூப தரிசனம், புன்ய யாகம், கால சந்தி, ப்ராதன ஹோமம், உத்த ஹோமம், உள்ளிட்ட ஹோமங்கள் வார்க்கப்பட்டு சரியாக 7.30 மணிக்கு மகாபூர்ணாஹீதி யாத்ராதானம் கடன் புறப்பாடு செய்யப்பட்டு கோபுர உச்சிகள் மீது ஐம்பொன்னால் ஆன கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.
அப்போது அங்கு குவிந்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.